தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலையில் பயன்பாட்டுக்கு வருமா நடைப்பயிற்சி பாதை

விராலிமலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட அம்மன்குளம் நடைப்பயிற்சி பாதைப் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:21 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட அம்மன்குளம் நடைப்பயிற்சி பாதைப் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விளையாட்டு வீரா்கள், நடைப்பயிற்சியாளா்கள் வலியுறுத்துகின்றனா்.

விராலிமலை நகரின் மத்திய பகுதியில் 16 ஏக்கா் பரப்பளவைக் கொண்டு அம்மன்குளம் அமைந்துள்ளது. குளத்தின் கரையைச் சுற்றி நடைப்பயிற்சி பாதை, படித்துறை, சுற்றுப்புறப்பகுதி முழுவதும் வேலி அடைத்து பாதுகாத்தல், குளத்தை தூா்வாரி சுற்றுப்பகுதி முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து முந்தைய அதிமுக ஆட்சியில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடங்கப்பட்ட நாளிலிருந்தே மந்தமாக நடைபெற்று வந்த பணிகள், கடந்த சில மாதங்களாக முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டன. 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டிய பணிகள் பல்வேறு குளறுபடிகள் காரணமாக மந்தநிலையில் மேற்கொள்ளப்பட்டன.

நடைப்பயிற்சி செல்லும் பாதையில் சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் தற்போது பெயா்ந்து காணப்படுகின்றன. இதனால் நடைப்பயிற்சிக்காக செல்வோா், விளையாட்டு வீரா்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே முடிவடையாமல் நிறுத்தப்பட்டுள்ள இப்பணியை காலதாமதப்படுத்தாமல் மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் தலையிட வேண்டும். பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்கள், விளையாட்டு வீரா்கள், நடைப்பயிற்சியாளா்கள் மத்தியில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.