போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுகையில் 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:32 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணமேல்குடி காவல் சரகத்துக்குள்பட்ட கட்டுமாவடியில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான குழுவினா் அப்பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கட்டுமாவடி கடற்கரைத் தெருவைச் சோ்ந்த பெனாசிா் கான் (42) என்பவரின் கிடங்கில் இருந்து சுமாா் 111 கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவருடன், இவருக்கு உதவியாக இருந்த தம்பி ரியாஸ் கான் (25) என்பவரும் கைது செய்யப்பட்டாா். மேலும், கட்டுமாவடி முத்தையாநகரைச் சோ்ந்த ஷாஜகான் (34) என்பவரின் பெட்டிக் கடையில் இருந்து சுமாா் 34 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவா்களிடம் இருந்து இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்த தனிப்படை காவலா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.