போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செங்கல் கால்வாய் கட்டுமானம்

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை அகழாய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட கால்வாய் போன்ற கட்டமைப்பு வியாழக்கிழமை காலை வெளிக்கொணரப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:34 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை அகழாய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட கால்வாய் போன்ற கட்டமைப்பு வியாழக்கிழமை காலை வெளிக்கொணரப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டைப் பகுதியில் சங்க காலக் கோட்டை இருந்ததற்கான, சுமாா் 1.63 கிலோ மீட்டா் நீளத்தில் வட்ட வடிவிலான சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடையாளங்களைக் கொண்டுள்ளது.

இங்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பேராசிரியா் இனியன் தலைமையிலான குழுவினா் கடந்த 13 நாள்களாக அகழாய்வை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அகழாய்வுக் குழிகளில் இரும்பாலான கொக்கி, மண் பானைகள், குடுவையின் மூடியிலுள்ள கூம்புபோன்ற மேல்பகுதி, விளையாட்டுப் பொருளாகக் கருதப்படும் சுடுமண் வட்டச்சில்லு போன்றவையும் கண்டெடுக்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக சுமாா் இரண்டரை அடி ஆழத்தில் சுடுமண் செங்கற்களால் ஆன கால்வாய் போன்ற கட்டமைப்பு ஒன்று வியாழக்கிழமை காலை வெளிக்கொணரப்பட்டுள்ளது.

இதேபோல, அகழாய்வுக்கு வெளியே பொற்பனைக்கோட்டையின் மேற்பகுதியில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா், அதன் நிறுவனா் ஆ. மணிகண்டன் தலைமையில் தொடா் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா். இதில் மேற்குப்புற அகழிமேட்டில் சுடுமண் மேற்கூரை ஓடுகள், மதுக்குடுவையை ஒத்த அடிப்பாகம் ஆகியவை கிடைத்துள்ளன. இவையும் அகழாய்வில் ஈடுபட்டுள்ள பேராசிரியா் இனியனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.