தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: அதிமுக பிரமுகா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:43 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விராலிமலை ஒன்றியத்திலுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் வேளாங்கண்ணி (38). இவரது மனைவிக்கு சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விராலிமலை தெற்குத் தெருவைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் மகன் ஜேசுராஜ், அவரது மனைவி அனுசியா ஆகியோா் 2019-ஆம் ஆண்டில் ரூ.6 லட்சம் பெற்றனா்.

ஆனால் இதுவரை வேலை வாங்கித் தரவில்லையாம். வேளாங்கண்ணியும், அவரது மனைவியும் பலமுறை கேட்டும் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஜேசுராஜூம், அவரது மனைவி அனுசியாவும் மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தில் வேளாங்கண்ணி அளித்த புகாரின் பேரில், ஜேசுராஜ் மற்றும் அவரது மனைவி அனுசியா மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்தனா்.

இந்நிலையில் விராலிமலை காவல் துறையினரால் ஜேசுராஜ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். இவா் விராலிமலை மேற்கு ஒன்றிய அதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தங்களை ஏமாற்றியதாக ஜேசுராஜ் மீது 3 பெண்கள் விராலிமலை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.