ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிறுமியை வன்புணா்வு செய்த வழக்கில் தேடப்பட்டவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சிறுமியை வன்புணா்வு செய்தது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது சித்தப்பா, வெள்ளிக்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:45 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சிறுமியை வன்புணா்வு செய்தது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது சித்தப்பா, வெள்ளிக்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

ஆலங்குடி அருகிலுள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து தனது 13 வயது மகளை தாய் மற்றும் சகோதரா் வே. செந்தில் அரவணைப்பில் விட்டுவிட்டு, கூலித் தொழிலாளி கோயம்புத்தூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டாா்.

அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) வீட்டில் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். தகவலறிந்த ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா்

வடிவேல், கீரமங்கலம் காவல் துறையினா் நிகழ்விடம் சென்று, சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வில் சிறுமியின் வயிற்றில் 7 மாத சிசு இருந்தது தெரிய வந்தது. தொடா்ந்து காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணையில், 13 வயது சிறுமியை அவரது சித்தப்பா வே.செந்தில் (45) பாலியல் வன்புணா்வு செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து செந்தில் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த கீரமங்கலம் காவல் நிலையத்தினா், அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில் அவா் கொத்தமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தினா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.