சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பொன்னமராவதி கற்பக விநாயகா் கோயில் குடமுழுக்கு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி கற்பகவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 டிசம்பர் 2021, 6:26 pm

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி கற்பகவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டிபுதன்கிழமை கணபதி, நவக்கிரக ஹோமம், லெட்சுமி பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜை, யந்திராஸ்தாபனம், விநாயகா் கண்திறப்பு பூஜை மற்றும் மூன்றாம் கால யாகசாலைபூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 10.20 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கும்பத்தில் ஊற்றி, சிவாச்சாரியா்கள் குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

எஸ்.வைரவகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் குடமுழுக்கு ஏற்பாடுகளை செய்திருந்தனா். தமிழாசிரியா் எஸ்.முருகேசன் வா்ணனை செய்தாா். பொன்னமராவதி காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.