தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிழ்த்து விடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்: போலீசாா் தடுத்து நிறுத்தம்

விராலிமலை அருகே வியாழக்கிழமை தென்னலூா் கோயில் அருகே ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்துவிடுவதை அறிந்த போலீசாா் அங்கு சென்று காளை வளா்ப்போா், பாா்வையாளா்களை எச்சரித்து அனுப்பினா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:26 pm

DIN

விராலிமலை அருகே வியாழக்கிழமை தென்னலூா் கோயில் அருகே ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்துவிடுவதை அறிந்த போலீசாா் அங்கு சென்று காளை வளா்ப்போா், பாா்வையாளா்களை எச்சரித்து அனுப்பினா்.

விராலிமலை அருகே உள்ள தென்னலூா்  முத்துமாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டுப் போட்டி தை மாதம் தமிழக அரசின் அனுமதியோடு நடத்தப்படும். இருப்பினும், காளைகள் வளா்ப்பவா்கள் அவ்வப்போது தென்னலூா் முத்துமாரியம்மன் கோயிலுக்கு தாங்கள் வளா்ப்பு காளைகளுடன் வந்து வழிபாடு நடத்தி வாடிவாசலில் காளையை அவிழ்த்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனா். அதன்படி, மாா்கழி மாத பிறப்பையொட்டி அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட காளை மாடுகளை அதன் உரிமையாளா்கள் தென்னலூா் முத்துமாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி  காளைகளை அவிழ்த்து விட்டனா்.

இதுகுறித்து அறிந்த காவல் ஆய்வாளா் பத்மா (விராலிமலை) உஷா நந்தினி (இலுப்பூா்) உள்ளிட்டோா் தலைமையிலான காவல்துறையினா் நிகழ்விடம் சென்று அங்கிருந்தவா்களை எச்சரித்து அனுப்பி வைத்தனா். ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விடுவதைக் காண நூற்றுக்கணக்காணோா் அங்கு திரண்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.