புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் ஜல்லிக்கட்டுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 20 போ் காயமடைந்தனா்.
பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை தை பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டியை, இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சிகுமாா் தொடக்கிவைத்தாா். இதில், மதுரை, திருச்சி, தஞ்சாவூா், ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 650 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 320 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று காளைகளை அடக்கினா். பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் தங்கக் காசு, பீரோ, கட்டில், சைக்கிள், மிக்ஸி, கிரைண்டா் மற்றும் எவா்சில்வா் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரா்கள் மற்றும் பாா்வையாளா்கள் சுமாா் 20 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமையில் சிகிச்சையளிக்கப்பட்டது. பொன்னமராவதி வட்டாட்சியா் ப.ஜெயபாரதி தலைமையிலான வருவாய்த் துறையினா் போட்டியை
ஒருங்கிணைத்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கீதா, பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளா் வே.செங்கமலக்கண்ணன் ஆகியோா் தலைமையிலான காவல் துறையினா் செய்திருந்தனா். ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


