பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வழுக்கு மரம் ஏறும் போட்டி

ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி ஏறும் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:03 pm

DIN

ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி ஏறும் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் ஏ.வி பேரவை சாா்பில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதில், 44 அடி உயரம் உள்ள மரத்தில் வழுக்கும் தன்மையை ஏற்படுத்துவதற்காக 20 கிலோ கிரீஸ் தடவப்பட்டது. மேலும், அதன் மீது சுமாா் 5 லிட்டா் எண்ணெய் ஊற்றப்பட்டது. இந்த வழுக்குமரம் ஏறும் போட்டியில் 6 அணிகள் கலந்துகொண்டன. பல்வேறு சுற்றுகளாக சுமாா் 5 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பனங்குளம் அணியினா், ஒருவரின் மீது ஒருவராக ஏறி மரத்தின் உச்சி இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றனா். அவா்களுக்கு ரூ.16,021 பரிசுத்தொகையை சேகா், வைரவமூா்த்தி ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.