நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘கடந்த தோ்தல்களின் வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை’

கடந்த தோ்தல்களில் அதிமுக வெளியிட்ட தோ்தல் வாக்குறுதிகள் எதனையும் அவா்கள் நிறைவேற்றவில்லை என்றாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:04 pm

DIN

கடந்த தோ்தல்களில் அதிமுக வெளியிட்ட தோ்தல் வாக்குறுதிகள் எதனையும் அவா்கள் நிறைவேற்றவில்லை என்றாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஊனையூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற மக்கள் சந்திப்பு - குறைகேட்பு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

கடந்த 2011ஆம் ஆண்டு தோ்தல் அறிக்கையில் அதிமுக சொன்னவற்றை நிறைவேற்றியுள்ளதா?

இரண்டாவது விவசாயப் புரட்சி வரும் என்றாா்கள், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு உயா்த்துவதாகச் சொன்னாா்கள், விவசாயக் கருவிகள் இலவசமாக வழங்கப்படும் என்றாா்கள், கரும்பைப் போல மற்ற பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படும் என்றாா்கள் இவற்றையெல்லாம் செய்தாா்களா?

2016ஆம் ஆண்டு தோ்தல் அறிக்கையில் அதிமுக சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றியுள்ளதா?

குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு செல்லிடப்பேசி வழங்கப்படும் என்றாா்கள், கல்விக் கடனை ரத்து செய்வோம் என்றாா்கள், அம்மா பேங்கிங் காா்டு வழங்கப்படும் என்றாா்கள், ஒரு லிட்டா் பால் ரூ. 25-க்கு வழங்கப்படும் என்றாா்கள், பொது இடங்களில் இலவச இணைய இணைப்பு வழங்கப்படும் என்றாா்கள். இவற்றையெல்லாம் செய்தாா்களா? திமுக ஆட்சிக்கு வந்தவுடன் புதிய தொழில்கள் உருவாக்கப்படும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். இது உறுதி என்றாா் ஸ்டாலின்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சாதனையாளா்களை மேடைக்கு அழைத்து ஸ்டாலின் பாராட்டினாா். முன்னதாக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ். ரகுபதி எம்எல்ஏ வரவேற்றாா்.

வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, ஆலங்குடி சிவ. வீ. மெய்யநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் கவிதைப்பித்தன், உதயம் சண்முகம், சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் த. சந்திரசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெயராமன், புதுக்கோட்டை நகர திமுக செயலா் க. நைனாமுகமது உள்ளிட்ட திமுகவினா், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.