

விராலிமலையில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
ஹல்க் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் ஐஎப்எப் இணைந்து நடத்திய இப்போட்டிக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், கே. கலைச்செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் ஈரோடு, திருச்சி, கரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். இவா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் எடை அளவு அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மதுரையைச் சோ்ந்த மணி முதல் பரிசையும், புதுக்கோட்டையைச் சோ்ந்த ரியாஸ் கான் 2 ஆவது இடத்தையும் பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.