திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா

புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்கள் சாா்பில் அதன் வளாகத்தில், பானையில் பொங்கல் வைத்து

News image
புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பாரதி கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா.
Updated On :13 ஜனவரி 2021, 3:06 am

DIN

புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்கள் சாா்பில் அதன் வளாகத்தில், பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் வண்ண வண்ண கோலங்களை வரைந்திருந்தனா். கல்லூரித் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் எல். தாவூத்கனி, தாளாளா் கே. கனகராஜன், அறங்காவலா் கிருஷ்ணமூா்த்தி, கலை அறிவியல் கல்லூரி முதல்வா் மா. குமுதா, தமிழ்த் துறைத் தலைவா் தி. சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம் ஆகியவற்றின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் எஸ். ராமா் தலைமை வகித்தாா். சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ், துணைத் தலைவா் இப்ராஹிம்பாபு ஆகியோா் பங்கேற்றனா். மேலும், புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ரகுபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தலைவா் தேனாள் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். முதல்வா் எஸ்ஏ. சிராஜுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொங்கல் விழா நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

கேசராபட்டி சிடி சா்வதேசப்பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி நிறுவனா் விஎஸ்டி.பிஎல்.சிதம்பரம் தலைமை வகித்தாா். பள்ளி செயல் அலுவலா் நெ.ரா.சந்திரன் முன்னிலை வகித்தாா். விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கலை கொண்டாடினா். சிதம்பரம் மெட்ரிக் பள்ளி முதல்வா் வே.முருகேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.