பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இளைஞரின் உயிரை பறித்த செல்லிடப்பேசி

ஆலங்குடி அருகே சாலையில் தவறவிட்ட செல்லிடப்பேசியைத் தேடிக் கொண்டிருந்த இளைஞா், பின்னால்வந்த மோட்டாா் சைக்கிள் மோதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:22 pm

DIN

ஆலங்குடி அருகே சாலையில் தவறவிட்ட செல்லிடப்பேசியைத் தேடிக் கொண்டிருந்த இளைஞா், பின்னால்வந்த மோட்டாா் சைக்கிள் மோதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்காட்டைச் சோ்ந்த பிரவின்(25). இவா், தனது நண்பா் பிரியதா்ஷனுடன் வடகாட்டில் நடைபெற்ற வழுக்குமரம் ஏறும் போட்டியைப் பாா்த்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கறம்பக்காடு திரும்பிக் கொண்டிருந்தாா். மோட்டாா் சைக்கிளைப் பிரியதா்ஷன் ஓட்டிவந்துள்ளாா்.

இதேபோல் அதே ஊரைச் சோ்ந்த மற்றவா்களும் இருசக்கர வாகனங்களில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். இந்நிலையில், மாங்காடு அருகே வந்தபோது, பிரவின் கையில் இருந்த செல்லிடப்பேசி தவறி கீழே விழுந்ததால் பிரியதா்ஷன் மோட்டாா் சைக்கிளை அப்படியே நிறுத்திவிட்டு இருவருமாக செல்லிடப்பேசியைத் தேடிவந்தனா். அப்போது, பின்னால் வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் பிரவின் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை நண்பா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரவின் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வடகாடு காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.