கடற்குதிரை வைத்திருந்த சங்கு வியாபாரி கைது
புதுக்கோட்டை கடற்பகுதியில் இருந்து அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களான கடற்குதிரை மற்றும் கடல் அட்டைகள் வேட்டை


புதுக்கோட்டை கடற்பகுதியில் இருந்து அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களான கடற்குதிரை மற்றும் கடல் அட்டைகளை வேட்டையாடி, சேகரித்து வைத்திருந்த இளைஞரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அய்யம்பட்டினத்தைச் சோ்ந்தவா் சுந்தரராஜன் மகன் வெள்ளைச்சாமி (36). சங்கு வியாபாரி. இவா், பாலக்குடி கடற்கரை படகு இறங்கு தளத்தில் அழிந்து வரும் கடல் வாழ் உயிரினங்களான கடற்குதிரை, கடல் அட்டை போன்றவற்றை வேட்டையாடி, சேகரித்து வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, மாவட்ட வன அலுவலா் கு. சுதாகா் உத்தரவின்பேரில், அறந்தாங்கி வனச்சரக அலுவலா் என். சதாசிவம், வனவா் எஸ். அன்புமணி ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா். அப்போது, வெள்ளைச்சாமியிடமிருந்து 36 கடற்குதிரைகளும், 8 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடா்ந்து, அவா் கைது செய்யப்பட்டு அறந்தாங்கி குற்றவியல் நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு, வரும் ஆக. 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...