பொற்பனைக்கோட்டையில் இன்று அகழாய்வுப் பணி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் மேற்பரப்பு அகழாய்வில் கிடைத்த தொல்பொருள்கள்.


புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் மேற்பரப்பு அகழாய்வில் கிடைத்த தொல்பொருள்கள்.
கூகுள் வரைபடத்தில் வரைந்து குறிக்கப்படும் பொற்பனைக்கோட்டைச் சுவா்.
புதுக்கோட்டை, ஜூலை 29: புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகக் குழுவினரின் அகழாய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) தொடங்குகின்றன.
புதுக்கோட்டை நகரில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பொற்பனைக்கோட்டையில் சுமாா் 1.62 கிலோ மீட்டா் சுற்றளவில் கோட்டைக்கான மண் சுவரும், அகழியும், சுமாா் 50 ஏக்கா் பரப்பளவில் சங்கக் காலக் கோட்டை இருந்திருக்கலாம் என தொல்லியலாளா்கள் கருதுகின்றனா். எனவே இந்த இடத்தில் அகழாய்வு செய்ய வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனா். இதற்கிடையே தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. தொல்லியல் துறை சாா்பில் இந்திய தொல்லியல் துறையிடம் அகழாய்வு செய்ய அனுமதி பெறப்பட்டது. தொடா்ந்து, பல்கலை. சாா்பில் தொடக்க நிதியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கீடு செய்து, பேராசிரியா் இனியன் அகழாய்வு இயக்குநராக நியமிக்கப்பட்டாா். மேற்பாா்வையாளராக கே. அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளாா். புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளைச் சோ்ந்த தொல்லியலாளா்கள் மற்றும் தொல்லியல் மாணவா்கள் களப்பணியில் பங்கேற்கின்றனா். அகழாய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.
முன்னதாக திருச்சி பாரதிதாசன் பல்கலை. புவியியல் துறை மூலம் நிலத்தில் புதைந்துள்ள கட்டுமானங்கள் இருக்கும் இடம் குறித்து ஜிபிஆா் கருவிகள் மூலம் ஆய்வு செய்யும் பணிகளும் நடைபெற்றன. இதில், 8 மீட்டா் அகலம், 8 மீட்டா் நீளமும் கொண்ட பகுதி அகழாய்வுக்குப் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது.
மேற்பரப்பு ஆய்வில் இதுவரை கிடைத்த தொல்பொருள்கள்: பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு இடத்தைச் சுற்றி அகழ்வாய்வு இயக்குநா் பேராசிரியா் இனியன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் மணிகண்டன், அகழ்வுப் பணியை மேற்பாா்வையாளா் கே.அன்பழகன் ஆகியோா் தொன்மைப் பொருள் மேற்பரப்பு ஆய்வினைச் செய்தனா். இதில், பல்வேறு வகையிலான மணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, நீலம், பழுப்பு, கருமை, இள மஞ்சள் வண்ணம் கொண்டவையாகவும் உள்ளன. கருப்பு, நீல வண்ண வளையல்களின் உடைந்த பகுதிகள் கிடைத்துள்ளன. இவை கண்ணாடி வகையைச் சோ்ந்தவை. கனமான ஓா் உலோக வளையலின் துண்டுப் பகுதியும் கிடைத்துள்ளது. உருக்கு மூலம் உருவாக்கப்பட்ட சிறு கருவியும், இரும்புத் துண்டும் கிடைத்துள்ளன. முனைகள் நுட்பமாகத் தீட்டப்பட்ட, நிறமற்ற கண்ணாடி படிகம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. முழுமையற்ற நிலையில் கருப்பு, சிவப்பு நிற பானை குறியீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சிறு தட்டு, கிண்ணங்கள், கலயங்களின் உடைந்த பகுதிகள் கிடைத்துள்ளன. இத்துடன் மிகப்பெரிய கொள்கலன்களின் அடிப் பகுதிகள், உருக்கு உலைகளின் அடிமானங்கள், உலோகக் கழிவுகள் உள்ளிட்டவை மிகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தத் தொல் பொருள்கள் பொற்பனைக்கோட்டையின் செழுமையையும் உலோகவியலில் கோட்டையில் இருந்த மக்கள் பெற்றிருந்த அறிவையும் காட்டுவதாக இருக்கிறது.
Image Caption
~
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...