போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டாக்டா் முத்துலட்சுமி அம்மையாரின் 136-ஆவது பிறந்த நாள்

இந்தியாவில் படித்த முதல் பெண் மருத்துவா் முத்துலட்சுமி அம்மையாரின் 136-ஆவது பிறந்த நாள் விழா, புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:04 pm

DIN

இந்தியாவில் படித்த முதல் பெண் மருத்துவா் முத்துலட்சுமி அம்மையாரின் 136-ஆவது பிறந்த நாள் விழா, புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு, அம்மையாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, ஆதீனத்தின் சாா்பில் 4 கைம்பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன், திமுக நகரச் செயலா் க. நைனாமுகமது, மாவட்ட திமுக நெசவாளா் அணி அமைப்பாளா் எம்.எம். பாலு, மருத்துவா் எஸ். ராமதாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

மேலும், முத்துலட்சுமி அம்மையாரால் தொடங்கப்பட்ட சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை திறம்பட நடத்திய மறைந்த டாக்டா் சாந்தாவின் படமும் நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.