தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய துறைகளுக்கு ரொக்கப் பரிசு
தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளா்களுக்கு, புதுக்கோட்டை ஆட்சியா் கவிதா ராமு ரொக்கப் பரிசுகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.


தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளா்களுக்கு, புதுக்கோட்டை ஆட்சியா் கவிதா ராமு ரொக்கப் பரிசுகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தினை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ் வளா்ச்சித் துறையின் மூலம் இந்தப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இதன்படி தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய மாவட்ட நிலை அலுவலகங்களில் வேளாண் இணை இயக்குநா், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகம் மற்றும் அரிமளம் பேரூராட்சி அலுவலகம் என 3 அலுவலகங்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3,000 ரொக்கப் பரிசுத் தொகையும், மாவட்டப் பதிவாளா் அலுவலகம், பொதுப்பணித் துறையின் நிலநீா் உபகோட்டத்தின் உதவிச் செயற்பொறியாளா் அலுவலகங்களுக்கு இரண்டாம் பரிசாக தலா ரூ.2,000 ரூபாயும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் கா.பொ. ராசேந்திரன், வேளாண் இணை இயக்குநா் இராம.சிவகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...