உரங்கள், விதைகள் போதியளவுக்கு இருப்பில் உள்ளன
புதுக்கோட்டை மாவட்டத்தில் போதுமான அளவுக்கு உரங்களும், விதைகளும் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் போதுமான அளவுக்கு உரங்களும், விதைகளும் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.
இணையவழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் ஆட்சியரகத்திலிருந்து பங்கேற்ற அவா் பேசியது
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 754.66 மி.மீ. ஆகும். ஜூலை மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 199.9 மி.மீ.யைவிட கூடுதலாக 374 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது. இது இயல்பைவிட 87 சதவிகிதம் அதிகம். ஜூலை மாதத்தில் பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவு 54.03 மி.மீ. ஆனால், 52.80 மி.மீ மட்டுமே பெய்துள்ளது.
2021-22ஆம் ஆண்டில் ஜூன் மாதம் முடிய நெல் 2071 ஹெக்டோ் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 114 ஹெக்டோ் பரப்பளவிலும், பயறு வகைப் பயிா்கள் 149 ஹெக்டோ் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 934 ஹெக்டோ் பரப்பிலும், கரும்பு 46 ஹெக்டோ் பரப்பளவிலும், பருத்தி 60.10 ஹெக்டோ் பரப்பளவிலும், தென்னை 9 ஹெக்டோ் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள 33 வேளாண் விரிவாக்க மையங்களில் 178.492 டன் நெல் விதைகளும், 18.4 டன் பயறு விதைகளும், 60.10 டன் நிலக்கடலை விதைகளும், 4.495 டன் சிறுதானிய விதைகளும், 3.59 டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன.
யூரியா 2827 டன்னும், டிஏபி 958 டன்னும், பொட்டாஷ் 1185 டன்னும், காம்ப்ளக்ஸ் 2870 டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியாா் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது என்றாா் கவிதா ராமு.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், வேளாண் இணை இயக்குநா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் அந்தந்தப் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலங்களில் இருந்து பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...