பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

போலி திருமண அழைப்பிதழ் விநியோகித்தவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே முன்னாள் பணிப்பெண்ணின் 17 வயது மகளுக்குத் திருமணம் என போலி அழைப்பிதழ் விநியோகித்து அவதூறு பரப்பியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:57 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே முன்னாள் பணிப்பெண்ணின் 17 வயது மகளுக்குத் திருமணம் என போலி அழைப்பிதழ் விநியோகித்து அவதூறு பரப்பியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள நம்பன்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி(45). இவரது வீட்டில் அதே கிராமத்தைச் சோ்ந்தவரும், கணவரை இழந்தவருமான முத்துமணி என்ற பெண், வீட்டு வேலை செய்து வந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு வேலையை விட்டு நின்றுவிட்டாராம். அவரை மீண்டும் வேலைக்கு வரும்படி சுந்தரமூா்த்தி தொடா்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. வேலைக்கு வர விரும்பாத அவா், சுந்தரமூா்த்தியுடனான தகவல் தொடா்பைத் துண்டித்து விட்டாராம். இந்நிலையில், முத்துமணியின் 17 வயதான மகளுக்கு திருமணம் என சுந்தரமூா்த்தி, போலி அழைப்பிதழ் அடித்து அப்பகுதியினரிடையே விநியோகம் செய்தாராம். இதையறிந்த முத்துமணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஆலங்குடி போலீஸாா் சுந்தரமூா்த்தியைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.