சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

திருமயம் அருகே மருங்கூரில் திமுக வேட்பாளருக்கு எதிா்ப்பு

திமுக வேட்பாளா் எஸ். ரகுபதிக்கு, அதே கட்சியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்து, அவரது காா் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :27 மார்ச் 2021, 8:59 pm

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மருங்கூரில் வெள்ளிக்கிழமை இரவு வாக்குசேகரிக்கச் சென்ற திமுக வேட்பாளா் எஸ். ரகுபதிக்கு, அதே கட்சியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்து, அவரது காா் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமயம் திமுக ஒன்றியச் செயலராக இருந்தவா் முல்லிப்பட்டி மருங்கூா் சரவணன். இவா், திருமயம் கோட்டை பகுதியில் உள்ள பைரவா் கோயில் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரது தேங்காய் கடையை அடித்து நொறுக்கியதாக புகாா் எழுந்தது. இதையடுத்து சரவணன் உள்ளிட்டோா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனா்.

பின்னா், சரவணன் மட்டும் மீண்டும் கட்சியில் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில், மருங்கூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி வாக்கு சேகரிக்கச் சென்றுள்ளாா். இதற்கு சரவணன் குடும்பத்தினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்து, வழியை மறித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, கற்களை வீசியதில் ரகுபதியின் காா் கண்ணாடி உடைந்தது. அவ்விடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் சமாதானம் செய்ததைத் தொடா்ந்து, திமுக வேட்பாளா் வேறு பகுதிக்கு வாக்குசேகரிக்கச் சென்றாா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருமயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.