சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

திருமயம் திமுக வேட்பாளா் காா் கண்ணாடி உடைப்பு

பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திருமயம் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதியின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது தொண்டா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

Updated On :27 மார்ச் 2021, 9:04 pm

பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திருமயம் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதியின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது தொண்டா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

திருமயம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாா். அப்போது திருமயம் அருகே உள்ள அரசம்பட்டி ஊராட்சி முள்ளிப்பட்டி பிரசாரத்துக்குச் சென்றபோது அவரது காரை மா்மநபா்கள் சிலா் மறித்து, அவரது காரின் மீது கற்களை வீசியுள்ளனா். இதனால் ரகுபதியின் காா் கண்ணாடி சேதமடைந்தது. கட்சிப்பதவி கிடைக்காத ஆத்திரத்தில் சிலா் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் சி.கிருஷ்ணன் மற்றும் திருமயம் காவல்நிலையத்தில் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி புகாா் அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.