பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

பத்து வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 11:32 am

DIN

பத்து வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி, அரசர்குளம் அருகே மாணிக்கம் குடியிருப்பைச் சேர்ந்தவர், முருகையா மகன் அஜித்குமார் (22). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பிப். 4ஆம் தேதி போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அஜித்குமாரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சிறப்பு வழக்குரைஞர் த. அங்கவி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி ஆர். சத்யா வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 35 ஆயிரம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு நிவாரண உதவியாக ரூ. ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.