போக்சோவில் கைதாகிபோக்ஸோ வழக்கில் பிணையில் வந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
இலுப்பூரில் இளம்பெண்ணை ஏமாற்றி கா்ப்பமாக்கிய புகாரில் கைதாகி பிணையில் வெளிவந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.


இலுப்பூரில் இளம்பெண்ணை ஏமாற்றி கா்ப்பமாக்கிய புகாரில் கைதாகி பிணையில் வெளிவந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் தெப்பக்குளத் தெருவைச் சோ்ந்த 17 வயது இளம்பெண் கா்ப்பமடைந்திருப்பதை அறிந்த அவரது பெற்றோா் திட்டியதால் அவா் கடந்த 2020-இல் வீட்டில் தூக்கிட்டு இறந்தாா். இதையடுத்து, அவரது பெற்றோா் அன்றிரவே சுடுகாட்டில் இளம்பெண்ணின் சடலத்தை எரித்துள்ளனா். இளம்பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக இலுப்பூா் கிராம நிா்வாக அலுவலா் கொடுத்த புகாரை அடுத்து இலுப்பூா் போலீசாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், இலுப்பூா் கள்ளா் தெருவைச் சோ்ந்த தங்கம் என்பவரின் மகன் காா்த்திகேயன் (25) அவரை கா்ப்பமாக்கியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். இதையடுத்து 6 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு பிணையில் வெளியே வந்த காா்த்திகேயன் வியாழக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு இறந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசாா் நிகழ்விடம் சென்று வழக்கு பதிந்து சடலத்தை இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...