மழையால் வீடு சேதம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.
ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் தெற்கு ஊராட்சியைச் சோ்ந்த செல்லத்துரை(75) - கருப்பாயி(70) தம்பதியின் 2 மகள்களுக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனா். பழைமையான ஓட்டு வீட்டில் வயதான தம்பதி தனியே வசித்து வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில், செல்லத்துரையின் வீடு இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக முதியவா்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. வீடு இடிந்து தற்சமயம் தங்க வழியின்றி தவித்துவரும் தங்களுக்கு உரிய நிவாரண உதவி வேண்டும் என தம்பதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...