ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெரம்பலூரில் காவலா் பீட் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவலா் பீட் என்னும் அமைப்பை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவண சுந்தா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:30 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவலா் பீட் என்னும் அமைப்பை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவண சுந்தா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் 24 மணி நேரமும் காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபடும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அமைப்பை கொடியசைத்து தொடக்கி வைத்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவண சுந்தா் கூறியது:

அனைத்து காவல் நிலையங்களுள்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை எளிதாக காவலா்களிடம் தெரியப்படுத்தவும், சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் நடைபெறாமல் தடுக்கவும் பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் துறையினரின் செயல்பாடுகள் அமையும் வகையில் இந்த காவலா் பீட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, கூடுதல் கண்காணிப்பாளா்கள் ஆரோக்கிய பிரகாசம், சுஜாதா, பாண்டியன், துணை கண்காணிப்பாளா்கள் மனோகரன், சுப்பாராமன், சஞ்சீவ்குமாா், மதுமதி உள்பட காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.