மாங்காட்டில் புதிய பேருந்து சேவை தொடக்கம்
ஆலங்குடி அருகிலுள்ள மாங்காடு- புதுக்கோட்டை இடையே புதிய நகரப் பேருந்து சேவையை சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.


ஆலங்குடி அருகிலுள்ள மாங்காடு- புதுக்கோட்டை இடையே புதிய நகரப் பேருந்து சேவையை சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
மாங்காடு ஊராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,
இப்பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாங்காட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதாராமு தலைமை வகித்தாா்.சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேருந்து சேவையைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில் புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக்கழகப் பொது மேலாளா் இளங்கோவன், ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, துணைத் தலைவா் ஆனந்தி இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...