ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு
விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு வளா்ப்புக் காளை முட்டியதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாட்டின் உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு வளா்ப்புக் காளை முட்டியதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாட்டின் உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விராலிமலை அருகிலுள்ள வடக்கு ஆண்டிப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி பெருமாள் (70). கடந்த புதன்கிழமை தனது வயலில் தான் வளா்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைக்கு தண்ணீா் கொடுத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக மிரண்ட காளை, பெருமாள் மீது மோதி அவரை முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவா், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...