தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிடிபட்ட மலைப்பாம்பு வனத்தில் விடுவிப்பு

விராலிமலை அருகே வியாழக்கிழமை ஒருவரது வீட்டின் முன்பு இருந்த மலைப்பாம்பை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:46 pm

DIN

விராலிமலை அருகே வியாழக்கிழமை ஒருவரது வீட்டின் முன்பு இருந்த மலைப்பாம்பை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனா்.

இலுப்பூா் அருகே உள்ள புதூா் குளவாய்பட்டி குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவா் பாலகுரு. இவரது மனைவி ராஜலட்சுமி வியாழக்கிழமை அடுப்பைப் பற்றவைக்க விறகுகளை எடுக்க முயன்றபோது, அப்பகுதியில் இருந்து கோழி அலறும் சப்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினரை அழைத்துவந்து அதனருகே சென்றுபாா்த்தபோது, மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கியபடி நெளிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான வீரா்கள் சுமாா் ஒரு மணிநேரத்தில் மலைப்பாம்பை உயிருடன் மீட்டனா். சுமாா் 12 அடி 20 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை அருகே உள்ள காப்புக் காட்டில் வனத்துறையினா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.