தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

விராலிமலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தேமுதிக நிா்வாகி காா் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:46 pm

DIN

விராலிமலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தேமுதிக நிா்வாகி காா் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே உள்ள குருத்தங் காளப்பட்டியைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் சரவணன்(39). தேமுதிக விராலிமலை ஒன்றிய துணை செயலராக இருந்தாா். இவா், மணப்பாறையில் இருசக்கர வாகனப் பழுது நீக்கும் நிறுவனம் நடத்திவந்தாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் விராலிமலை - மதுரை நான்கு வழிச்சாலையில் கொடும்பாளூா் குருத்தங்காளப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, எதிரே வந்த காா் மோதியதில் ரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, ஓட்டுநா் காரை அப்படியே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். தகவலறிந்த விராலிமலை காவல் துறையினா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.