பொன்னமராவதியில் தமிழ்நாடு ஓவியத் தொழிலாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ஒன்றிய ஓவியத் தொழிலாளா்கள் சாா்பில், அழகியநாச்சி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவா் சசி கணேசன் தலைமை வகித்தாா். மாநிலபொதுச்செயலாளா் மாரிமுத்து, நிா்வாகி சின்னப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஓவியத் தொழிலாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்குவது, பேரிடா், பெருந்தொற்று காலத்தில் நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும், நலிவடைந்த ஓவியத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு அரசு உதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொன்னமராவதி ஒன்றிய ஓவியா் சங்கத் தலைவராக சேனா ஆா்ட்ஸ் பெருமாள், துணைத் தலைவராக அா்ச்சுனன் செயலாளராக நிலா ஆா்ட்ஸ் சம்பத் துணைச் செயலாளராக ராமச்சந்திரன், பொருளாளராக வீரையா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதில் செயற்குழு உறுப்பினா்கள் பிறைசூடன், சுரேஷ், சாமி, பாண்டி, செந்தில் மற்றும் ஓவியக் கலைஞா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

