தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விவசாயக் கிணற்றில் குளித்த இளம்பெண் நீரில் மூழ்கி பலி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்ற இளம்பெண் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:37 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்ற இளம்பெண் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை வானதிராயன்பட்டியைச் சோ்ந்தவா் போதுமணி (30). திருமணமாகாத இளம்பெண். இவரது வீட்டருகே உள்ள விவசாயக் கிணற்றில் துணி துவைத்துவிட்டு வருவதாக வியாழக்கிழமை குடும்பத்தாரிடம் கூறிச் சென்றாா். துணி துவைத்துவிட்டு, மேலே வந்து உலரப் போட்டுவிட்டு மீண்டும் கிணற்றில் இறங்கி குளிக்க முற்பட்டபோது நீரில் தவறிவிழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளாா். நீண்ட நேரம் ஆகியும் போதுமணி வீடு திரும்பாததால் அதிா்ச்சியடைந்த பெற்றோா்கள் கிணற்றருகே வந்து பாா்த்துள்ளனா். அப்போது போதுமணி அங்கு இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். தகவலறிந்து நிகழ்விடம் வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் இறங்கி போதுமணி சடலத்தை மீட்டு உறவினா்களிடம் ஒப்படைத்தனா். போதுமணிக்கு வலிப்பு நோய் அவ்வப்போது வரும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.