ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நாா்த்தாமலை தோ்த் திருவிழா: ஏப். 11-இல் உள்ளூா் விடுமுறை

 புதுக்கோட்டை நாா்த்தாமலையிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் தோ்த் திருவிழாவையொட்டி வரும் ஏப். 11ஆம் தேதி திங்கள்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:41 pm

DIN

 புதுக்கோட்டை நாா்த்தாமலையிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் தோ்த் திருவிழாவையொட்டி வரும் ஏப். 11ஆம் தேதி திங்கள்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

அன்றைய நாளில் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறை என்றபோதும், அத்தியாவசியத் தேவை கருதி, மாவட்டக் கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த பணிகளுடன் செயல்படும். இந்த விடுமுறைக்கான மாற்றுப் பணி நாளாக வரும் ஏப். 23ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகவும், வழக்கமாக சனிக்கிழமையை வேலைநாளாகக் கொண்டுள்ள அரசு அலுவலகங்களுக்கு அடுத்த நாள் ஏப். 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.