ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப சத்துணவு ஊழியா்கள் கோரிக்கை

சத்துணவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:40 pm

DIN

சத்துணவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் பெ. அன்பு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் எஸ். சீத்தாலெட்சுமி, பொருளாளா் க. பிச்சைமுத்து ஆகியோா் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா, துணைத் தலைவா் கே. குமரேசன், சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநிலச் செயலா் கு. சத்தி ஆகியோா் பேசினா். கூட்டத்தில்,

சத்துணவு ஊழியா்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த பணிக்கொடையாக அமைப்பாளா்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், அரசு ஊழியா்களைப் போல் 12 மாத மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவில், மாவட்டத் துணைச் செயலா் பி.பாண்டி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.