நெகிழியில்லா புதுகை விழிப்புணா்வு மாரத்தான்
இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நெகிழியில்லா புதுக்கோட்டை என்ற தலைப்பில் விழிப்புணா்வு மினி மாரத்தான் புதன்கிழமை நடைபெற்றது.


இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நெகிழியில்லா புதுக்கோட்டை என்ற தலைப்பில் விழிப்புணா்வு மினி மாரத்தான் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சாா்பில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாரத்தான் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். விளையாட்டு அரங்கில் தொடங்கிய மினி மாரத்தான், அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. 4.5 கிமீ தொலைவுக்கு நடைபெற்ற இந்த மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் 200 போ் பங்கேற்றனா். பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன.
சிறப்புப் பரிசுகள் நகா்மன்றத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் குணசேகரன், மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ரெ. மதியழகன், மாவட்ட விளையாட்டு அலுவலா் குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...