‘ஆலங்குடி கூடத்தில் 300 டன் உளுந்து கொள்முதல் செய்ய அனுமதி’
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் மூலம் 300 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் மூலம் 300 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் மூலம் 300 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.63 என்ற விலையில் உளுந்து கொள்முதல் செய்யப்படும். உளுந்து கொள்முதல் வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறும்.
இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு, ஆலங்குடி விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 97868 65918 என்ற எண்ணிலும், ஆலங்குடி வேளாண்மை அலுவலரை (வேளாண் வணிகம்) 80727 60544 என்ற எண்ணிலும், திருவரங்குளம் உதவி வேளாண்மை அலுவலரை (வேளாண் வணிகம்) 91597 12286 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...