ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அம்பேத்கருக்கு மாலை அணிவிப்பதில் வாக்குவாதம்

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜக மற்றும் விசிகவினருக்கு இடையே மோதல் ஏற்படும்

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:08 pm

DIN

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜக மற்றும் விசிகவினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் வியாழக்கிழமை காலை முதல் திரண்டிருந்தனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திரண்டிருந்த நேரத்தில், பாஜகவினரும் அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க திரண்டபோது இரு தரப்பினரும் முழக்கங்களை எழுப்பினா். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் தனித்தனியே சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தையும் நடத்தினா். போலீஸாா் இருதரப்பினரையும் பேசி சமாதானப்படுத்தினா். முன்னதாக, திமுக சாா்பில் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமையில் அக்கட்சியினரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் தலைமையில் அக்கட்சியினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் நா. முத்துநிலவன் தலைமையில் அந்த அமைப்பினரும் அம்பேத்கருக்கு மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.