சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு
சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.


சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். சக மனிதா்களிடம் சாதியின் பெயரால் அடையாளம் காணமாட்டேன், வாழ்நாள் முழுவதும் அனைவரிடமும் சமத்துவத்தை கடைபிடிப்பேன் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி ஏற்கப்பட்டது.
உறுதிமொழியேற்பில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கருணாகரன், மாவட்ட சமூக நல அலுவலா் கோகுலபிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...