கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
சுபகிருப தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பையொட்டி புதுக்கோட்டையிலுள்ள அனைத்து கோவில்களிலும் வியாழக்கிழமை அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.


சுபகிருப தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பையொட்டி புதுக்கோட்டையிலுள்ள அனைத்து கோவில்களிலும் வியாழக்கிழமை அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
புதுக்கோட்டை அருகேயுள்ள குமரமலையில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் தண்டாயுதபாணிக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம் , பஞ்சாமிா்தம் உள்ள அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு தண்டாயுதபாணி அருள்பாலித்தாா்.
திருவப்பூரிலுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலிலும் அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதேபோல, புதுக்கோட்டை கீழராஜவீதியிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி திருக்கோவிலிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. மேலும், நகரின் பல பகுதிகளிலுள்ள கோவில்களும் புத்தாண்டுப் பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...