சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
ஆலங்குடி அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.


ஆலங்குடி அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி பாரதிதாசன் சாலையை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் ( 65) இவரது மனைவி செல்வராணி (55). இருவரும் மோட்டாா் சைக்கிளில் புதுக்கோட்டை சென்றுவிட்டு வடவாளம் வழியாக ஆலங்குடி திரும்பி சென்றுள்ளனா். அப்போது, அவ்வழியே சென்ற வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.
இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த செல்வராணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...