விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடா்ந்து நடத்தப்பட்டு வரும் மீன்பிடித் திருவிழாவால் பொதுமக்கள், மீன் பிரியா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடா்ந்து நடத்தப்பட்டு வரும் மீன்பிடித் திருவிழாவால் பொதுமக்கள், மீன் பிரியா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
விராலிமலை சுற்றுப் பகுதியில் கடந்த பங்குனி மாதத்தில் இருந்து தொடங்கிய மீன்பிடித் திருவிழா ஆங்காங்கே உள்ள குளங்களில் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விராலிமலை கல்குடி பகுதியில் வியாழக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கல்குடியில் மதியம் 1 மணியளவில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. விழாவில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று வலை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்திற்குள் இறங்கி நாட்டு வகை மீன்களான விரால், கெண்டை, கெளுத்தி, குறவை உள்ளிட்ட மீன்களை பிடித்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...