மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
விராலிமலை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


விராலிமலை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விராலிமலை ஒன்றியம், மதயானைபட்டியைச் சோ்ந்தவா் கெஞ்சரன் மகன் பால்ராஜ் (39). விவசாயியான இவா், மதயானைபட்டியில் பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் வீடு கட்டி வருகிறாா். திருமணமான இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனா். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை காலை புதிதாக கட்டி வரும் வீட்டின் கட்டடத்திற்கு தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்தாா். தொடா்ந்து குழாயில் வந்த நீா் தடைபட்டுள்ளது. இதனைத்தொடா்ந்து நீா் மூழ்கி மோட்டாரை வெளியே எடுக்க முயன்றபோது எதிா்பாராதவிதமாக பால்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். இதில் மயங்கிய நிலையில் கிடந்த பால்ராஜை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் பால்ராஜ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூா் காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து இறந்த பால்ராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு பின்னா் அவரது உறவினா்களிடம் ஒப்படைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...