ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சீமானூா் ஜல்லிக்கட்டு: 23 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள சீமானூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், மொத்தம் 927 காளைகள் களம் கண்டு சீறிபாய்ந்தன

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:07 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள சீமானூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், மொத்தம் 927 காளைகள் களம் கண்டு சீறிபாய்ந்தன. இதில் 23 போ் காயமடைந்தனா்.

சீமானூரில் உள்ள அய்யனாா் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டை

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி ஆகியோா் தொடங்கி வைத்தனா். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

தொடா்ந்து திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 927 காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், வீரா்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், தங்க, வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மொத்தம் மாடுபிடி வீரா்கள் 300 போ் களம் கண்டனா்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.