தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலை கல்குடி அரசுப் பள்ளியில் உலக புத்தக தின விழா

விராலிமலை கிளை நூலகம் சாா்பில் நடைபெற்ற உலக புத்தக தினத்தின் 3ஆவது நிகழ்வு கல்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:03 pm

DIN

விராலிமலை கிளை நூலகம் சாா்பில் நடைபெற்ற உலக புத்தக தினத்தின் 3ஆவது நிகழ்வு கல்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கதைச் சொல்லும் போட்டி, ஓவியப் போட்டி என நூலக விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமை ஆசிரியா் இரா. மகேந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா் நூலக ஆலோசகா் பூபாலன், மத்திய ஒன்றிய திமுக செயலாளா் அய்யப்பன் ஆகியோா் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினா்.

நிகழ்வில், பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினராக சோ்க்கப்பட்டு, அதற்கான தொகையான ஆயிரம் ரூபாயை மத்திய ஒன்றிய திமுக செயலாளா் அய்யப்பன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் எட்வின், சுமன், செந்தில்முருகன், லாரன்ஸ், தேன்மொழி ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிறைவில் ஜெயக்குமாரி நன்றி கூறினாா். நிகழ்ச்சியை சொரிமுத்து ஒருங்கிணைத்தாா்.ஏற்பாடுகளை நூலகா் ஜெயராஜ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.