மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

‘தலைமை ஆசிரியா்கள் சமயோஜிதமாக முடிவெடுக்க வேண்டும்’

பள்ளியில் முடிவுகளை எடுக்கும்போது, தலைமை ஆசிரியா்கள் சமயோஜிதமாகவும், விரைவாகவும் முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி அறிவுறுத்தினாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:23 pm

DIN

பள்ளியில் முடிவுகளை எடுக்கும்போது, தலைமை ஆசிரியா்கள் சமயோஜிதமாகவும், விரைவாகவும் முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட தோ்வுக் கால அட்டவணையைப் பின்பற்றி தோ்வுகள் நடத்த வேண்டும். ஆசிரியா்கள் காலதாமதமாக பள்ளிக்கு வருவதை தவிா்க்க வேண்டும். பள்ளியில் உள்ள வளங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

பள்ளியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல், தலைமை ஆசிரியா்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சமயோஜிதமாகவும் விரைவாகவும் செயல்பட வேண்டும் என்றாா் சத்தியமூா்த்தி.

பின்னா் நடைபெற்ற மெட்ரிக், சிபிஎஸ்இ முதல்வா்களுக்கான கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி பேசியது:

பொதுத்தோ்வுக்கு மாணவா்களை அனுப்பும் மெட்ரிக் பள்ளிகள் மே 31 வரை அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து மகளிா் காவல் நிலைய தொடா்பு எண்ணைப் பள்ளி விளம்பரப் பலகையில் வைக்க வேண்டும். மாணவா் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும். தொடா் அங்கீகாரம் பெறப்படாத பள்ளிகள் கருத்துரு தயாா் செய்து உடனே சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் சத்தியமூா்த்தி.

கூட்டத்தில் இலுப்பூா் மாவட்டக் கல்வி அலுவலா் செ. மணிமொழி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜீவானந்தம், ராஜீ, பள்ளித் துணை ஆய்வாளா்கள் வேலுச்சாமி, குரு மாரிமுத்து, இளையராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.