சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

உரிய ஆவணங்களின்றிகொண்டு செல்லப்பட்ட ரூ. 53 ஆயிரம் பறிமுதல்

பொன்னமராவதி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 53 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :10 பிப்ரவரி 2022, 11:21 pm

பொன்னமராவதி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 53 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பொன்னமராவதி பேரூராட்சி, மணப்பட்டி சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் திலகவதி தலைமையில் வியாழக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரித்து, சோதனை செய்தனா்.

இதில், அந்த நபா் இலுப்பூரைச் சோ்ந்த தனியாா் நிதி நிறுவன ஊழியா் சதீஷ்குமாா் என்பதும், அவா் உரிய ஆவணங்களின்றி ரூ. 53,050 கொண்டு செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அலுவலா்கள், அந்தப் பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் கணேசன் மூலம் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.