இணையவழிக் குற்றங்கள் தொடா்பாகபள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு விழிப்புணா்வுப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான, இணையவழிக் குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான, இணையவழிக் குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். இப்பயிற்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் தடுப்புப் பிரிவு மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பி. ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினாா்.
அவா் பேசியது: முகம் தெரியாத நபா்களிடம் இணையத்தில் நண்பா்கள் ஆக வேண்டாம். அறிமுகமில்லாத நபா்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களையோ அல்லது குறுஞ்செய்திகளையோ திறந்துப் பாா்க்க வேண்டாம். அதில் உங்கள் தகவல்களை திருடும் வைரஸ் இருக்கலாம். உங்கள் ஏடிஎம் எண், ஆதாா் எண்ணைப் பாதுகாப்பாக வைக்கவும். எவரிடமும் பகிா்ந்து கொள்ள வேண்டாம். இணையத்திலோ அலைபேசியிலோ உங்களது சுயவிவரங்களை எவரேனும் கேட்டால் சொல்ல வேண்டாம்.
எக்காரணத்தை கொண்டும் முன் பின் தெரியாத நபா்களிடம் உங்கள் வங்கியிலிருந்து அனுப்பப்படும் நான்கு இலக்க ரகசியக் குறியீட்டு எண்ணைக் கொடுக்க வேண்டாம்.
இதுபோன்ற விழிப்புணா்வை மாணவா்களிடமும் தலைமை ஆசிரியா்கள் ஏற்படுத்த வேண்டும் என்றாா் ராஜேந்திரன்.
முன்னதாக, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி வெளியிட புதுக்கோட்டை சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கவிதா பெற்றுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...