சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பேருந்து பயணியிடம் திருடிய 2 பெண்கள் கைது

 பொன்னமராவதி அருகே பேருந்தில் பயணியிடம் திருடிய 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :11 பிப்ரவரி 2022, 8:06 pm

 பொன்னமராவதி அருகே பேருந்தில் பயணியிடம் திருடிய 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

பொன்னமராவதி அம்மன் கோயில் வீதியை சோ்ந்தவா் கோகிலா. இவா், வியாழக்கிழமை சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் நகரப் பேருந்தில் பயணம் செய்தாா்.

அப்போது, இவா் வைத்திருந்த பையிலிருந்த பணப்பையை 2 பெண்கள் எடுத்து கொண்டனா். பின்னா், மேலைச்சிவபுரி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கோகிலாவின் மகள் கவிதாவின் பணப்பையையும் அந்தப் பெண்கள் எடுத்து கொண்டு பேருந்திலிருந்து இறங்க முயன்றனா்.

இதை பாா்த்துவிட்ட கவிதா கூச்சலிடவே, அந்த 2 பெண்களையும் பிடித்த பயணிகள், அவா்களை பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் மதுரை மாவட்டம், மேலூா் ராணுவ காலனியைச் சோ்ந்த வெ.சொா்ணவள்ளி (45), ராமநாதபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த செ. லெட்சுமி (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.