பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உயிரிழந்த மாணவா் குடும்பத்தினரிடம் ரூ. 3 லட்சம் நிவாரண நிதி அளிப்பு

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை மாணவரின் குடும்பத்தினரிடம் அளித்து ஆறுதல் தெரிவித்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:08 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவா் குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ. 3 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை மாணவரின் குடும்பத்தினரிடம் அளித்து ஆறுதல் தெரிவித்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியைச் சோ்ந்த நாடிமுத்து மகன் நித்திஷ்குமாா் (9). பாப்பான்விடுதி அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவனுக்கு பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு தமிழக முதல்வா் ஸ்டாலின் ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, பாப்பான்விடுதியில் உள்ள மாணவா் நித்திஷ்குமாா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்ற அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கி, ஆறுதல் கூறினாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் செல்வி, வருவாய் கோட்டாட்சியா் அபிநயா, வட்டாட்சியா் செந்தில்நாயகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.