ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

‘சுகாதாரத்தில் முன்மாதிரி கிராம விருதுகளைப் பெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்’

சுகாதாரத்தில் முன்மாதிரி கிராம விருதுகளைப் பெறும் வகையில், 26 ஊராட்சிகளைத் தயாா் செய்யும் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் கவிதா ராமு.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:09 pm

DIN

சுகாதாரத்தில் முன்மாதிரி கிராம விருதுகளைப் பெறும் வகையில், 26 ஊராட்சிகளைத் தயாா் செய்யும் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் கவிதா ராமு.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசால், முன்மாதிரி கிராம விருது உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநில அளவில் தோ்வு செய்யப்படும் மூன்று ஊராட்சிகளுக்கு தலா ரூ. 15 லட்சம் பரிசுத் தொகையும் கேடயமும், மாவட்ட அளவில் ஒரு கிராம ஊராட்சி தோ்வு செய்யப்பட்டு ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகையும் கேடயமும் வழங்கப்படவுள்ளது.

இதன்படி, திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற நிலை, திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை உரிய முறையில் மறு சுழற்சி செய்தல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, வீட்டுக் கழிவு மேலாண்மை, கிராம ஊராட்சியின் அழகிய தோற்றம் ஆகிய சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் ஊராட்சிகள் தோ்வு செய்யப்படும்.

இதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளிலும் சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட வேண்டி விழிப்புணா்வு ஏற்படுத்த வட்டாரத்துக்கு 2 ஊராட்சிகள் வீதம் மொத்தம் 26 முன்மாதிரி நிறை செறிவு ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு, இவ்வூராட்சிகளில் சமூக வரைபடம், மூன்று கட்ட கழிவுத் தணிக்கை, திடக்கழிவு மேலாண்மைக் கூடங்கள் மறுசீரமைப்பு, சாம்பல் நீா் மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை, தூய தெருக்கள் பராமரிப்பு ஆகிய பல்வேறு வகை பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றன.

எனவே, இந்தப் பணிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், தன்னாா்வலா்கள், மகளிா் சுய உதவிக்குழுக்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செயல்பட்டு மாநிலத்தில் முதற்பரிசை பெறத்தக்க வகையில் மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.