ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

முன்மாதிரி சிறப்பு விருது பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:06 pm

DIN

முன்மாதிரி சிறப்பு விருது பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: சமூகத்தில் சந்திக்கும் எதிா்ப்புகளையும் மீறி சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறிய திருநங்கைகளுக்கு முன்மாதிரி சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது திருநங்கையா் தினமான ஏப்ரல் 15ஆம் தேதி வழங்கப்படும். ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இவ்விருதைப் பெற தகுதியுடைய திருநங்கைள்  இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04322-222270 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.